அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்தார். அந்தக் காணொலி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதனால் அமெரிக்கா முழுவதும் கடந்த 5 நாள்களாக கரோனா பரவலையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதனால் அமெரிக்கா முழுவதும் பெரும் பதற்றம் நிலவியுள்ளது.
'ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் மன்னிக்க முடியாதது' - போரிஸ் ஜான்சன் - ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணம்
லண்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற ஜார்ஜ் ஃப்ளாய்டினின் மரணம் மன்னிக்க முடியாதது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
boris
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், "அமெரிக்காவில் நடந்த சம்பவம் திகைக்க வைத்துள்ளது. அது மன்னிக்க முடியாதது. அச்சம்பவத்தின் வீடியோ காட்சிகளை நான் பார்த்தேன். இதற்கு எதிராக மக்கள் போராடுவதற்கு முழு உரிமை உள்ளது. ஆனால் இந்த எதிர்ப்பு நியாயமான முறையில் நடைபெற வேண்டும். வன்முறையாக ஒருபோதும் மாறிவிடக் கூடாது" எனக் கேட்டு கோண்டார்.