தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இறுதி சடங்குக்கு சென்ற குடும்பம் விமான விபத்தில் பலி! - ஜார்ஜியா விமான விபத்து

வாஷிங்டன் : ஜார்ஜியா மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இறுதி சடங்கிற்கு சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.

plane crash
plane crash

By

Published : Jun 6, 2020, 10:19 AM IST

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வில்லிஸ்டன் நகரிலிருந்து, இன்டியானா மாகாணத்தின் நியூகேசில்லுக்கு நான்கு பயணிகள், ஒரு விமான ஓட்டியுடன் சிறிய ரக விமானம் ஒன்று நேற்று கிளம்பியுள்ளது.

இந்த விமானம் ஜார்ஜியா மாகாணம் ஈட்டன்டன் நகர் அருகே பறந்து கொண்டிருக்கும் போது, சரியாக மாலை 3.15 மணிக்கு (உள்ளூர் நேரம்) விமானம் திடீரென தீப்பற்றி தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில், அந்த விமானத்தில் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் ஓரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் (விமான ஓட்டி உட்பட) என்றும், அவர்கள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜார்ஜியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இறுதிச் சடங்குக்குச் சென்ற குடும்பம் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவெடுத்த சீனா: விமானங்களை அனுமதித்த அமெரிக்கா!

ABOUT THE AUTHOR

...view details