தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'சைபர் தாக்குதலில் ஈடுபடும் ரஷ்யா, சீனா, வடகொரியா'- ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு! - ஐரோப்பிய ஒன்றியம் சைபர் தாக்குதல்

பிரஸ்சல்ஸ்: ரஷ்ய ராணுவம், சீன சைபர்ஸ்பைஸ் , வட கொரிய நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் சைபர் தாக்குதலில் ஈடுபடுவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

eu
eu

By

Published : Aug 1, 2020, 6:47 AM IST

இன்றைய டிஜிட்டல் உலகில் சைபர் தாக்குதல் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கணிணிகளை ஹேக் செய்து பணத்தை திருடுவது, தனி நபரின் தகவல்களை திருடுவது போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன.

இதனால், சிறிய லிங்கை செல்போனுக்கு அனுப்பி எளிதாக ஹேக்கிங் செய்பவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், ஜரோப்பிய ஒன்றியம் முதல்முறையாக சைபர் தாக்குதல்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ரஷ்ய ராணுவம், சீன சைபர்ஸ்பைஸ் , வட கொரிய நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் 2017 'WannaCry' ரென்சம்வேர், 'NotPetya', 'கிளவுட் ஹாப்பர்' போன்ற வைரசை அனுப்பி ஹேக் செய்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் கூறுகையில், ”ரஷ்யாவின் ஜி.ஆர்.யு ராணுவ புலனாய்வு அமைப்பை சேர்ந்த மூன்று பேர், சிரியாவின் ரசாயன ஆயுதங்கள் குறித்து ஆய்வு செயயும் நெதர்லாந்தை தளமாகக் கொண்ட OPCW (Organization for the Prohibition of Chemical Weapons) அமைப்பின் வைஃபை நெட்வொர்க்கை ஹேக் செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இவர்களின்‌ முயற்சியை 2018இல் டச்சு அலுவலர்கள்‌ தடுத்து நிறுத்தினர்.

மேலும் அவர் கூறுகையில், "ஐரோப்பா உள்பட ஆறு கண்டங்களில் உள்ள நிறுவனங்களின் இணையத்தை தாக்கி வணிக ரீதியாக முக்கியமான தரவுகளை திருடியதால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

இதற்கு காரணம் சீன சைபர்ஸ்பைஸ் சேர்ந்த இருவர் தான் எனத் தெரிவிக்கின்றனர். வட கொரிய நிறுவனம் சோசுன் எக்ஸ்போ, வன்னா க்ரை சைபர் தாக்குதல்கள் மூலம், சோனி பிக்சர்ஸை ஹேக் செய்தது மட்டுமின்றி, வியட்நாம் வங்கிகள், பங்களாதேஷ் வங்கிகளை ஹேக் செய்து இணைய வழி பணத்திருட்டில் ஈடுபட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

உலகமே டிஜிட்டலுக்கு மாறி கொண்டிருக்கும் சமயத்தில் நடைபெறும் சைபர் தாக்குதல் பலருக்கு அச்சத்தையும், டிஜிட்டல் மீதான நம்பகத்தன்மையை உடைத்து ஏறிகிறது.

ABOUT THE AUTHOR

...view details