கீவ்:உக்ரைன் மீது ரஷ்யா படைகள் பிப். 24ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்திவருகின்றன. ஒன்பதாவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. அதன்படி இன்று (மார்ச் 4) உக்ரைனின் சாபோரிஷியாவில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள், சாபோரிஷியா அணுமின் நிலையம் மீது குண்டுகள் விழுந்தது. அங்குள்ள ஆறு உலைகளில் ஒன்று தீப்பிடித்து எரிந்துவருகிறது. இதன்காரணமாக கதிர் வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றன. இதுகுறித்து அணு உலையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த சாபோரிஷியா உலையில் ஆயிரக்கணக்கான டன் அளவு அணு எரிபொருள்கள், ரசாயனங்கள் உள்ளன. இங்கு ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன என்று தெரிவித்தார்.