தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

விவசாயிகள் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும்- ஐநா - அன்டோனியோ குட்ரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக்

இந்தியாவில் விவசாயிகளுக்கு அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய உரிமை உண்டு. எனவே அலுவலர்கள் அவற்றை அனுமதிக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் ட்ஜாரிக் தெரிவித்துள்ளார்.

Farmers in India have right to demonstrate peacefully: Guterres spokesperson
Farmers in India have right to demonstrate peacefully: Guterres spokesperson

By

Published : Dec 5, 2020, 2:41 PM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் ட்ஜாரிக்கிடம் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அவர், ​​"மக்கள் தங்களுக்கான குரல் எழுப்புவதை நாங்கள் விரும்புகிறோம். மக்கள் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய உரிமை உண்டு. அலுவலர்கள் அத்தகைய ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்க வேண்டும் ​​" என்றார்.

கடந்த 10 நாள்களாக டெல்லி-ஹரியானா மற்றும் டெல்லி-உத்தரப் பிரதேச எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதைத் தொடர்ந்து செய்தித் தொடர்பாளர் இந்தக் கேள்வியை எழுப்பியதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதவராக குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க: இந்தியாவின் எதிர்ப்பை மீறி விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கும் கனடா பிரதமர்!

ABOUT THE AUTHOR

...view details