தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

போஸ்னியா தேவாலயத்தில் அலட்சியமாக நடைபெற்ற புனித சடங்கு - தேவாலயத்தில் அலட்சிய போக்கில் நடைப்பெற்ற புனித சடங்கு

சராஜிவே: போஸ்னியாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் கரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றாமல் புனித சடங்குகள் நடந்த சம்பவம் படமாக்கப்பட்டுள்ளது.

Faithful attend Bosnia churches despite virus rules
Faithful attend Bosnia churches despite virus rules

By

Published : Apr 17, 2020, 5:41 PM IST

உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், போஸ்னியா நாட்டின் சராஜிவோ நகரில் உள்ள ஒரு ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் ஒன்றில் சமூக இடைவெளி பின்பற்றாமல் புனித சடங்குகள் நடந்துள்ளன.

கடந்த வியாழன் அன்று சரோஜிவா நகரில் உள்ள வாசிலிஜே தேவாலயத்தில் நற்கருணை வழங்கும் புனித சடங்கு நடந்துள்ளது. அந்த நிகழ்வு படமாக்கப்பட்டுள்ளது. அதில் பாதிரியார் ஒருவர் ஒரே ஸ்பூனில் புனித கோப்பையில் உள்ள ஒயினை (WINE) தேவாலயத்திற்கு வருபவர்களுக்கு கொடுத்தது படமாக்கப்பட்டது.

இது தேவாலயத்தின் அலட்சிய போக்காக அப்பகுதியில் உள்ள அலுவலர்களால் பார்க்கப்படுகிறது. கடந்த நான்கு வாரங்களாக போஸ்னியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது.

இதையும் படிங்க... நீண்ட போராட்டம்... 137 ஆண்டுகளுக்குப் பிறகு தேவாலயம் கட்ட அனுமதி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details