தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'கரோனாவை இந்தியா - நெதர்லாந்து அரசுகள் இணைந்து எதிர்கொள்ளும்'

கரோனா பாதிப்பை இந்தியா - நெதர்லாந்து அரசுகள் எவ்வாறு இணைந்து எதிர்கொள்கின்றன என்ற நிலவரம் குறித்து நெதர்லாந்துக்கான இந்தியத் தூதர் வேணு ராஜாமோனியுடன் மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மா நடத்திய நேர்காணலின் தமிழாக்கம் இதோ...

Nederland
Nederland

By

Published : Apr 23, 2020, 9:49 PM IST

இந்தியா மற்றும் நெதர்லாந்து அரசுகள் கரோனா பாதிப்பு தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் இணைந்து செயலாற்றிவருவதாக இந்தியாவுக்கான வெளியுறவுத் தூதர் வேணு ராஜாமோனி தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து தலைநகர் ஹேக்கிலிருந்த இந்தியத்தூதர் வேணு ராஜாமோனியுடன், காணொலி காட்சி மூலம் மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மா நடத்திய நேர்காணலில், 'இந்திய - நெதர்லாந்து அரசுகள் இந்த இக்கட்டான சூழலில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறைகளில் இணைந்து செயல்படுவதாகவும், ஜான்சன் அண்டு ஜான்சன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இதற்குச் சிறப்பான பங்களிப்பைத் தருவதாகவும்' தெரிவித்தார்.

மேலும், 'நெதர்லாந்து மேற்கொண்டுள்ள லாக் டவுன் நடவடிக்கைகளின் தனித்துவமான அம்சம் குறித்தும் இந்திய அரசுடன் பகிர்ந்து கொண்டதாகவும், இதன் மூலம் லாக்டவுனுக்குப் பிந்தைய காலகட்டத்தில் எவ்வாறு செயல்படவேண்டும் என்ற புரிதலை இந்தியா பெறும்' என அவர் தெரிவித்தார்.

நெதர்லாந்தில் வாழும் இந்தியர்களுக்கும், அங்கு சுற்றுலா சென்று சிக்கித்தவிக்கும் இந்தியர்களுக்கும் எவ்வாறு உதவவேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தன்னிடம் வழிகாட்டுதல் வழங்கியதாக தெரிவித்த தூதர், பல நாடுகளின் செயல்பாடுகள் மூலம் உரிய படிப்பினைகளை பெற்றதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு உரிய பாதுகாப்புக் கருவிகள், பரிசோதனை கருவிகளைப் பெற்றுத்தருவதில் வெளியுறவுத்துறையின் செயல்பாடுகள் அளப்பரியது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், 'நெதர்லாந்தில் சிக்கித்தவிக்கும் இந்திய மாணவர்கள் அனைவருக்கும் உரிய உணவு, இருப்பிடம் ஆகியவை வழங்கப்படுகிறது. மற்ற நாடுகளிலும் இதை அந்தந்த தூதர்கள் உறுதிபடுத்துகின்றனர். லாக் டவுன் காரணமாக இந்தியாவிலிருந்து நெதர்லாந்துக்கு வரவேண்டிய வர்த்தக நடவடிக்கைகள் சுணக்கம் கண்டுள்ளது. தற்காலிகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தொழில் நுட்பத்துறை மூலம் இந்த பின்னடைவுகளை வாய்ப்புகளாக மாற்ற முடியும்' என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் குற்றச்சாட்டு குறித்தும், அந்த அமைப்பிற்கான நிதியை ட்ரம்ப் நிறுத்தி வைத்தது குறித்தும் தூதரிடம் எழுப்பிய கேள்விக்கு அவர், 'தற்போதைய சூழலில் ஐரோப்பிய நாடுகள் கரோனாவை தடுத்து நிலைமையைச் சீர்செய்வது குறித்து மட்டுமே சிந்தித்து வருவதாகவும், இதன் பின்னணிகளில் கவனம் கொள்ள விரும்பவில்லை' எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேலை, சீன நிறுவனங்களின் தீவிரமான செயல்படுகளை இந்தியாவைப் போலவே நெதர்லாந்து அரசும் உற்று நோக்கிவருவதாக தூதர் வேணு ராஜாமோனி தெரிவித்தார்.

இந்தியத் தூதர் வேணு ராஜாமோனியுடன் நேர்காணல்

இதையும் படிங்க:கரோனாவுக்கு பிந்தைய உலகம் கண்டுள்ள பெரும் மாற்றங்கள் என்ன? ஒரு அலசல்

ABOUT THE AUTHOR

...view details