லண்டன்:மறைந்த இங்கிலாந்து இளவரசி 1995ஆம் ஆண்டு பிபிசி செய்தி நிறுவனத்திற்குக் கொடுத்த நேர்காணலில் அரண்மனை ரகசியங்களை பொதுவெளியில் பேசியதால் சர்ச்சையானது.
இந்த நேர்காணல் தொடர்பாக பிபிசி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி லார்ட் டைசன் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையின் அறிக்கை அண்மையில் வெளியானது. அதில், பிபிசி முறைகேடுகளைச் செய்தது உறுதிசெய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், "டயானாவை கண்காணிக்க தனிப்பட்ட நபர்களுக்கு பணம் வழங்கப்பட்டது போன்று போலியாக வங்கிக்கணக்குகளை பிபிசி செய்தி ஆசிரியர் பஷீர் உருவாக்கியுள்ளார். இதனை டயானாவின் சகோதரரிடம்காட்டி அவரின் நம்பிக்கையைப் பெற்று, டயானாவை நேர்காணல் செய்துள்ளார். இந்த முறைகேடுகள் குறித்து பிபிசிக்கு தெரிந்திருந்தும் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. டயானாவிடம் நேர்காணலில் வார்த்தைகளை வாங்குவதற்காக பல்வேறு சதித்திட்டங்களை ஊடகவியலாளர் பஷீர் மேற்கொண்டார். மேலும், 1996ஆம் ஆண்டு பிபிசி நடத்திய உள்ளக விசாரணையில் வெளிப்படைத் தன்மை இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.