இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், "மாட்ரிட் முதல் பாரிஸ் வரை, ஏதென்ஸ் முதல் ரிகா வரை, ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் எல்லா இடங்களிலும் மக்கள் கரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்வதைக் காண முடிகிறது.
அனைவருக்கு கரோனா தடுப்பூசி - ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் - கரோனா தொற்று பாதிப்பு
பிரஸ்ஸல்ஸ்: ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் அனைவருக்கும் போதுமான கரோனா வைரஸ் தடுப்பூசி அளவைக் கொண்டிருக்கும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்தார்.
முதலில், வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு கரோனா தடுப்பூசி அளித்து பாதுகாக்கிறோம். விரைவில் ஐரோப்பிய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்காக போதுமான இருப்பு கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்க மருந்தக நிறுவனமான ஃபைசர், ஜெர்மன் நாட்டு தடுப்பு மருந்தான பயோஎன்டெக் உருவாக்கிய தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றியம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒப்புதல் வழங்கியது. மேலும், 20 கோடி தடுப்பூசி பெறுவதற்கு உலக நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம் செய்துள்ளது.