ஜெர்மனியின் நாஜி படைகளை நேசநாடுகளின் படையிடம் சரணடைந்த மே மாதம் 7ஆம் தேதி, இரண்டாம் உலகப்போரின் வெற்றி நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாஜி தலைவர் ஆல்பிரட் ஜோட் சரணடைந்த அந்நாள் நியூயார்க்கிலிருந்து லண்டன், பாரிஸிலிருந்து மாஸ்கோ வரை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் பெரும் திரளாகக் கூடிக்கொண்டாடும் இரண்டாம் உலகப்போரின் வெற்றி நாளான மே 7 ஆம் தேதி நடைபெறவிருந்த 75 ஆவது நாள் விழா, இந்தாண்டு உலகம் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜிப் படையை நேச நாடுகள் வென்றதை நினைவுகூரும் வகையில், மே மாதத்தில் ராணுவ அணிவகுப்பு விழா மாஸ்கோவில் விமரிசையாக கொண்டாட திட்டமிட்டப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டின் பிற்பகுதியில் அவ்விழா நடைபெறுமென ரஷ்யா ஒத்திவைத்துள்ளது.