தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஐரோப்பிய நாடுகளை புரட்டிப் போட்ட வெள்ளப்பெருக்கு: 160 நபர்கள் பலி

ஐரோப்பிய நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும், கட்டடங்கள் இடிந்து விழுந்ததிலும் இதுவரை 160 நபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Published : Jul 18, 2021, 3:26 PM IST

ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்த வெள்ளப்பெருக்கு
ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்த வெள்ளப்பெருக்கு

ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி காட்சியளிப்பதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

கார்களும் இருசக்கர வாகனங்களும் நீரில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. வெள்ளநீரில் முழ்கியும், கட்டடம் இடிந்து விழுந்ததிலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160ஐத் தாண்டியுள்ளது .

மேற்கு ஜெர்மனியின் ரைன்லேண்ட் - பலட்டினேட் மாகாணத்தில் உள்ள அஹர்வீலரில் மட்டும் இதுவரை 98 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அங்கு மட்டும் நூற்றுக்கணக்கான வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அண்டை நாடான வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் 43 நபர்கள் உயிரிழந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல, பெல்ஜியமில் தற்போது இறப்பு எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணவில்லை என்பதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கு

கரூர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் தடுப்பு உடைந்ததால் நெதா்லாந்து எல்லையில் உள்ள ஜெர்மனி நகரமான வாஸன்பொ்க்கின் ஒரு பகுதியிலிருந்து 700 நபர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

தொடர் மழையால் ரைன்லேண்ட் - பாலடினேட் நகரில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில், மின் விநியோகம் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:’தென் ஆப்பிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

ABOUT THE AUTHOR

...view details