தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா - ஐரோப்பியாவில் உயிரிழப்பு 90 ஆயிரத்தைக் கடந்தது !

ஐரோப்பாவில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று (ஏப்ரல் 16) 90 ஆயிரத்தை கடந்தது

corona virus
corona virus

By

Published : Apr 17, 2020, 12:12 AM IST

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகெங்கிலும் பரவி மானிடத்தை அச்சுறுத்தி வருகிறது.

குறிப்பாக, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில், நாளுக்கு நாள் கோவிட்-19 பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புக்களும் மளமளவென அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், ஐரோப்பியக் கண்டத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று (ஏப்ரல் 16) 90 ஆயிரத்தை கடந்து 90 ஆயிரத்து 180ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், அக்கண்டத்தில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 47 ஆயிரத்து 279ஆக உள்ளது.

உலகளவில் கோவிட்-19 நோயால் இதுவரை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 499 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற நாடுகளைப் போன்று கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா மே 3ஆம் தேதிவரை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : பெருந்தொற்றை எதிர்த்து நியூசிலாந்து செய்து காட்டிய திறன் வாய்ந்த ஆற்றல்!

ABOUT THE AUTHOR

...view details