கரோனா வைரஸ் நோயால் ஐரோப்பிய நாடுகள் கடும் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துவருகின்றன. நாடுகளைப் பொருளாதார தேக்க நிலையிலிருந்து மீட்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் 750 பில்லியன் யூரோக்களை மீட்பு தொகையாக ஒதுக்கியுள்ளது. இதில், பெரும்பான்மையான தொகை 27 உறுப்பு நாடுகளின் பொது பட்ஜெட்டிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக ஐரோப்பிய நாடுகள் மிகக் கடுமையான பொருளாதார தேக்க நிலையை அடைந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிதிப் பற்றாக்குறை வரம்பை மீறி ஐரோப்பிய நாடுகள் வேலைவாய்ப்பு, வணிகம், சுகாதார அமைப்பு போன்றவற்றுக்கு பெரும்பான்மையான தொகைகளை ஒதுக்கியுள்ளன. பல நாடுகளும் ஊரடங்கை திரும்பப் பெற்றுவருவதால், மக்கள் தங்கள் வேலைகளுக்கு திரும்பியுள்ளனர்.
நிலைமையை சமாளிக்க இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு நிதி தேவைப்படுகிறது. இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வோன் லியேன் கூறுகையில், "70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய சவாலை நாம் சந்தித்துள்ளோம். இது ஐரோப்பிய நாடுகளுக்கான காலம்.