உலகம் முழுவதும் கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு அதிகளவில் உள்ளது. தினந்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தாண்டுகிறது. பல தடுப்பூசி மருந்துகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன.
இந்நிலையில், இந்தாண்டின் டிசம்பர் மாத பாதியில் இரண்டு கரோனா தடுப்பூசி மருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்குவர அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பேசிய ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், "அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பூசியும், மாடர்னா தயாரித்த கரோனா தடுப்பூசியும் இந்தாண்டின் இறுதிக்குள் ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (ஈ.எம்.ஏ) மூலம் அங்கீகரிக்க வாய்ப்புள்ளது.
சந்தைக்கு மருந்தை அறிமுகப்படுத்தும் முதல் முயற்சி ஆகும். நாங்கள் கரோனா தடுப்பூசி தொடர்பான அனைத்து தகவல்களையும் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.