ஐரோப்பிய நாடுகளில் முதற்கட்டமாக முதியவர்கள், மருத்துவப் பணியாளர்கள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோருக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. ஜெர்மனியின் பாரத் என் பயோடெக், அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த கரோனா தடுப்பு மருந்து, ஐரோப்பாவின் 27 நாடுகளிலுள்ள சுமார் 45 கோடி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
ருமேனியா நாட்டில் முதல் முதலாக இந்த தடுப்பூசியை பெற்றுக்கொண்ட செவிலியர் மைக்கேலா ஏஞ்சல் கூறுகையில், தடுப்பூசியை போட்டுக்கொண்ட போது எந்தவித வலியும் இல்லை. மக்கள் விழிப்புடன் இருந்து தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
தற்போதுவரை ஐரோப்பாவில், ஒரு கோடியே 60 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்து 36 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்கள், மூன்று வாரம் கழித்து மீண்டும் இரண்டாவது மருந்தைப் பெற்றுக்கொள்ள வர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.