உலகளவில் கரோனா பெருந்தொற்று எண்ணிக்கை பத்து நாள்களாக வேகமாக அதிகரித்துவருகிறது. குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நோய் பாதிப்பைத் தடுக்க உலக நாடுகளும் பல்வேறு முயற்சிகளை செய்துவருகின்றன.
அதன் முக்கியப் பகுதியாக நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த லாக் டவுன் என்ற முழு ஊரடங்கை பல நாடுகள் அறிவித்துள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், கரோனா பாதிப்பைக் குறைக்கும் முக்கிய நடவடிக்கையாக உலக நாடுகள் ஊரடங்கு முடிவை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. அதேவேளை, அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படக்கூடாது. அதை ஒவ்வொரு நாட்டின் அரசும் உறுதிப்படுத்த வேண்டும்.
குறிப்பாக மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், தடுப்பூசிகள் ஆகியவை எந்தவித சுணக்கமும் இன்றி சிகிச்சைப் பெருவோருக்குச் சென்று சேர வேண்டும். அவசர காலத்தில் இதுபோன்ற நடைமுறை சிக்கல்கள் ஏற்படும் என்பதை அரசு முன்கூட்டியே கணித்து அதற்கான முன்னேற்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:கரோனா அச்சுறுத்தல்: இளவரசர் சார்லஸின் நிலைமை என்ன?