கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஜென்ட் பல்கலைக்கழக தொல்லியல் துறை இணைந்து ஆன்டிகுவிட்டி என்ற ஆராய்ச்சி இதழில் தொல்லியல் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், இத்தாலி தலைநகர் ரோமிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் டிப்பர் நதி அருகே புதைந்துள்ள ’ஃபலேரி நோவி’ என்ற நகரைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், அங்கு குழிகளே தோண்டாமல், க்ரவுண்ட் பெனட்ரேட்டிங் ரேடார் (Ground Penetrating Radar) எனும் அதி நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு, மண்ணில் புதைந்துள்ள அந்நகரின் அமைப்பை படம்பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
roman town convered by radar scan 30 மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள அந்நகரம் கி.மு. 251ஆம் ஆண்டு எழுப்பப்பட்டதாகவும், அந்த காலத்திலேயே ’ஃபலேரி நோவி’ நகரில் குளியல் அறை, சந்தை, வழிபாட்டுத் தலம், நினைவுச் சின்னம், தண்ணீர் குழாய்கள் உள்ளிட்ட அனைத்தும் இருந்ததாகவும் இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்களைக் கண்டறியும் முயற்சியில், இந்த ஆய்வு திருப்புமுனையை ஏற்படுத்தும் எனவும், இந்த ஆய்வு அறிக்கையின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 'தடுப்பு மருந்தை உருவாக்குவதில் சர்வதேச ஒத்துழைப்பை வலுவூட்ட சீனா முயற்சி'