தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இங்கிலாந்தில் ஆயிரத்தைக் கடந்த கரோனா பலி எண்ணிக்கை - england corona death count

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 260 பேர் உயிரிழந்துள்ளனர்.

லண்டன்
லண்டன்

By

Published : Mar 28, 2020, 9:20 PM IST

கரோனா வைரஸ் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஏற்படும் உயிரிழப்பையும் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறிவருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று ஒரே நாளில் 260 பேர் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,019 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details