2020ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்டோபர் 5ஆம் தேதிமுதல் அறிவிக்கப்பட்டுவருகின்றன. இன்று(அக்.12) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு பொருளாதாரதிற்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்ச பால்.ஆர் மில்க்ரோம், ராபர்ட் பி.வில்சன் ஆகிய இருவர் வென்றுள்ளனர்.
இந்தாண்டு பரிசு குறித்து நோபல் குழு கூறியதாவது, அமெரிக்காவைச் சேர்ந்த இந்த இருவரும் ஏலம் முறைகள் தொடர்பான விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வு மூலம் பாரம்பரிய முறைப்படி விற்பனை செய்யும் பொருள்கள் மற்றும் சேவைகளை சிறப்பான முறையில் விற்பனை செய்வது எப்படி என வழிமுறைகளை வகுத்துள்ளனர். இதன் மூலம் உலகளவில் உள்ள விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள், வரி செலுத்துவோர் மிகவும் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசுத் தொகையான சுமார் ரூ.8.32 கோடி இருவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் என நோபல் குழு அறிவித்துள்ளது.