லண்டன்:இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு(72) கடந்த மார்ச் மாதம் கரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால் அவர் அரண்மனையில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இதையடுத்து அரண்மனையில் உள்ள பலரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர்.
இந்நிலையில், இங்கிலாந்து ஊடகங்கள் பல, இங்கிலாந்த இளவரசர் வில்லியம்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவர் தன்னுடைய உடல்நிலை குறித்த செய்திகள் வெளிவர விரும்பாத காரணத்தினால் அவரது வீடு மற்றும் கென்சிங்டன் அரணமனையிலிருந்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளிவரவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.