தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைர நெக்லெஸ் திருடுபோன வழக்கு : 3 பேர் கைது! - வைர நெக்லெஸ் திருட்டு

பெர்லின் : ’கிரீன் வால்ட்’ அருங்காட்சியகத்திலிருந்து 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைர நெக்லெஸ் திருடப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெக்லெஸ் திருட்டு வழக்கு
நெக்லெஸ் திருட்டு வழக்கு

By

Published : Nov 17, 2020, 8:00 PM IST

ஜெர்மனி நாட்டின் டிரெஸ்டனில் உள்ள ’கிரீன் வால்ட்’ அருங்காட்சியகத்திலிருந்து 2019ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி, 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விலை உயர்ந்த வைர நெக்லெஸ், பதக்கம், பிற அரிய ஆபரணங்கள் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக டிரெஸ்டன் காவல் துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாகத் தேடிவந்தனர். இந்தத் தேடுதல் பணியில் 1,500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில், பெர்லினின் நியூகோல்ன் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து இது குறித்துப் பேசியுள்ள காவல் துறையினர், "நாங்கள் 1,638 பேர் மொத்தம் 18 இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டோம். அதில் பெர்லினின் நியூகோல்ன் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவர்கள் இதேபோல் பல அரிய பொருள்களையும் கொள்ளையடித்துள்ளதும் தெரிய வந்துள்ளது" என்றனர்.

இதையும் படிங்க:கரோனா: ஜெர்மனியில் 2 பேருக்கு மேல் ஒன்றாகக் கூடத் தடை

ABOUT THE AUTHOR

...view details