உலகில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை கரோனாவால் 29 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரை 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக பெரும்பாலான உலக நாடுகள் லாக்டவுனை அறிவித்துள்ளன. அத்துடன் உலக நாடுகள் விமான போக்குவரத்தை முற்றிலுமாக முடக்கிவைத்துள்ளன. இந்த நிலை எவ்வளவு நாட்கள் தொடரும் என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்கும் முயற்சியை சில உலக நாடுகள் பரிசீலித்துவருகின்றன.