தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சொன்ன தேதியில் 5ஜி அறிமுகப்படுத்தப்படும்: ஃபிரான்ஸ் திட்டவட்டம்

பாரீஸ்: ஹுவாவே-அமெரிக்கா மோதலை பொருட்படுத்தாமல், 2020ஆம் ஆண்டு ஃபிரான்ஸில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என அந்நாட்டுத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

france

By

Published : May 22, 2019, 1:38 PM IST

5ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை செல்போன் சேவையை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் உலகின் முன்னணி நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றன.

அந்த வரிசையில், ஐரோப்பிய ஒன்றிய நாடான ஃபிரான்ஸ் வரும் 2020ஆம் ஆண்டு, 5ஜியை அறிமுகப்படுத்த முடிவுசெய்துள்ளது.

ஆனால், 5ஜி சேவைக்குத் தேவையான கருவிகளை தயாரிக்கும் முன்னணி சீன நிறுவனமான ஹுவாவேவுக்கும், அமெரிக்காவிற்கு இடையே மோதல் நிலவிவருவதால், அதனை அறிமுகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஃபிரான்ஸ் நாட்டுத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கவலை தெரிவித்திருந்தன.

இந்நிலையில், இப்பிரச்னை குறித்து ஃபிரான்ஸின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் செபாஸ்டின் சொடியானோ கூறுகையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஹுவாவேயைத் தவிர்த்து மற்ற நிறுவனங்களில் 5ஜி தொழில்நுட்பக் கருவிகளை வாங்கலாம் என்றும், ஹுவாவே-அமெரிக்கா மோதல் 5ஜி அறிமுகப்படுத்தலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னர் திட்டமிட்டபடி 2020இல் கண்டிப்பாக 5ஜி சேவை ஃபிரான்ஸில் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details