சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் தோன்றிய கோவிட் 19 வைரஸ் (கரோனா) தற்போது இத்தாலி, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கும் மிக வேகமாக பரவிவருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதகரித்துவருகிறது.
இந்நிலையில், கோவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக, டென்மார்க்கில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டென்மார்க் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 81 வயது மதிக்கதக்க நபர் உயிரிழந்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.