லண்டன்: உலகம் முழுவதும்கரோனா தொற்று உருமாற்றம் அடைந்து ஆல்பா, பீட்டா, காமா, லாம்ப்டா, டெல்டா, ஒமைக்ரான் என்று பரவி வருகிறது. கரோனா தொற்றை போல் உருமாறிய வேரியண்ட்டுகள் உயிர்ப் பலி, தீவிர நோய் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதற்கு கரோனா தடுப்பூசியே காரணம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும் தொற்று பரவல் முற்றிலும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், பிரிட்டனில் ஒமைக்ரான-டெல்டா தொற்றுகள் உருமாற்றம் அடைந்து டெல்டாக்ரான் தொற்றாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில், பிரிட்டனில் 25 பேருக்கு ஒரே நேரத்தில் ஒமைக்ரான-டெல்டா தொற்றுகள் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.