தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

டெல்டா கரோனா 98 நாடுகளில் பரவியுள்ளது - உலக சுகாதார அமைப்பு - கரோனா செய்திகள்

டெல்டா வகை கரோனா தொற்று உலகளவில் தீவிரமாகப் பரவிவவருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

WHO chief
WHO chief

By

Published : Jul 3, 2021, 4:25 PM IST

உலகளவில் கரோனா தொற்று பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் டெல்டா வகை தொற்றின் தீவிரம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேகமெடுக்கும் டெல்டா கரோனா பரவல்

இது குறித்து அவர், "டெல்டா வகை கரோனா உலகின் பல நாடுகளில் அதிவேகமாகப் பரவிவருகிறது. பெருந்தொற்றின் ஆபத்தான காலத்தில் நாம் உள்ளோம்.

எந்தவொரு நாடும் முழுமையான பாதுகாப்பில் இல்லை. தொடர்ந்து உருமாறிவரும் டெல்டா வகை கரோனா குறைந்தது 98 நாடுகளில் பரவியுள்ளது.

எனவே உலக நாடுகள் தடுப்பூசி திட்டத்தை முடுக்கிவிட்டு, முறையான கண்காணிப்பு, பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். பைசர், மார்டனா, பயோ என் டெக் போன்ற தடுப்பூசி நிறுவனங்கள் உற்பத்தி திறனை வேகமாக அதிகரிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நான்கில் ஒருவருக்கு பாதுகாப்பில்லா குடிநீர் - ஆய்வில் தகவல்

ABOUT THE AUTHOR

...view details