டெல்லி: கோவிட்-19 பெருந்தொற்றுக்கு மத்தியில் தேசிய அளவிலான நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட நுழைவு தேர்வுகளை நடத்துவது முறையாகாது, அது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என இளம் சூழலியல் சமூக செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் செவ்வாய்க்கிழமை (ஆக.25) கூறியுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “கோவிட்-19 பெருந்தொற்றுக்கு மத்தியில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை நடத்துவது இந்திய மாணவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி. இந்தத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். இதற்கு என் ஆதரவு உண்டு” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், #PostponeJEE_NEETinCOVID என்ற ஹேஷ்டேக்கையும் பகிர்ந்துள்ளார் இந்த 17 வயது இளம்போராளி. நாட்டில் மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான தகுதி தேர்வான நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்டவை வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி மற்றும் 13ஆம் தேதி நடைபெறுகின்றன.
இந்நிலையில் கிரேட்டா தன்பெர்க் இவ்வாறு கூறியுள்ளார். நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 17ஆம் தேதி தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உலகத் தலைவர்களைத் தெறிக்கவிடும் கிரேட்டா!