தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் உயிரிழப்பு! - செக் குடியரசு மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு

ப்ராகு: செக் குடியரசு நாட்டின் மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், குற்றவாளி உள்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.

czech hospital, செக் மருத்துவமனை தாக்குதல்
czech hospital

By

Published : Dec 10, 2019, 6:12 PM IST

ஐரோப்பிய ஒன்றிய நாடுககளில் ஒன்றான செக் குடியரசின் ஒஸ்த்ராவா நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் இன்று அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், ஆறு பேர் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் எனத் தெரிகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் இது குறித்து தீவிர விசாரணை நடத்திவருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: குடியுரிமை சட்டம் குறித்து அமெரிக்க கருத்து - இந்தியா கடும் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details