தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கோவிட் பரவல் தடுப்பே முதன்மை - உலக நாடுகளுக்கு ஐநா வலியுறுத்தல் - ஐநா பொது செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ்

கோவிட் பரவலை தடுப்பதே நமது தலையாய கொள்கையாக இருக்க வேண்டும் என உலக நாடுகளுக்கு ஐநா வலியுறுத்தியுள்ளது.

Antonio Guterres
Antonio Guterres

By

Published : Jan 22, 2022, 12:06 PM IST

ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக உலகளவில் கோவிட் அலை தற்போது தீவிரமடைந்துள்ளது. உலகளவில் தினசரி 36.52 லட்சம் கோவிட் பாதிப்புகள் ஏற்படும் நிலையில், நாளொன்றுக்கு சுமார் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், உலகம் ஸ்திரமற்ற நிலையில் தற்போது உள்ளது. இந்த சூழலில் நாம் ஒற்றுமை, நம்பிக்கை, சமத்துவம் ஆகிய பாதைகளை தேர்வு செய்து செயல்படுவது அவசியம்.

கோவிட் பரவலை தடுப்பதே நமது தலையாய கொள்கையாக இருக்க வேண்டும். எனவே, அனைத்து நாடுகளும் அவசர தேவையை உணர்ந்து செயலாற்ற வேண்டும். உலகளில் நிதி சேவை என்பது மோசமான போக்கில் உள்ளது. பணக்காரர்களுக்கு சாதகமாகவும், ஏழைகளை தண்டிப்பதாகவும் அது உள்ளது.

அத்துடன் காலநிலை மாற்றம், சைபர் குற்றங்கள், அமைதி பாதுகாப்பு போன்ற சவால்களையும் உலக நாடுகள் சந்தித்துவருகிறது. இவற்றை உலக நாடுகள் இணைந்து எதிர்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க:காதலியின் தாய்க்கு கிட்னி கொடுத்த காதலன் - வேறு ஒருவரை திருமணம் செய்த காதலி

ABOUT THE AUTHOR

...view details