கோவிட்-19 வைரஸ் தொற்றால், ஸ்பெயின் நாட்டில் இதுவரை 2 லட்சத்து 82 ஆயிரத்து 852 பேர் பாதிக்கப்பட்டும், 28 ஆயிரத்து 752 பேர் உயிரிழந்தும் உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் நான்காம் இடத்தில் ஸ்பெயின் இருக்கிறது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு கடந்த மே 4ஆம் தேதி முதல் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை என இதுவரை ஐந்து முறை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் ஜூன் 6ஆம் தேதி வரையுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக ஸ்பெயினில் கோவிட்-19 இறப்புகள் குறைந்த வண்ணம் இருந்து வந்ததையடுத்து ஸ்பெயின் நாட்டில், சர்வதேச சுற்றுலா ஜூலை மாதத்திலிருந்து மீண்டும் தொடங்கும் என அந்நாட்டு பிரதமர் சான்செஸ் நேற்று (மே 24) அறிவித்தார்.
தலைநகர் மாட்ரிட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜூன் மாதம் 8ஆம் தேதி முதல், லா லிகா கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் மற்றும் பார்சிலோனாவில் உள்ள உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் வாடிக்கையாளர்களுக்கு திறக்கப்பட்டும். ஸ்பெயின் நாட்டின் சில கடற்கரை பகுதிகள் சூரியக்குளியலுக்காக திறக்க மீண்டும் தயாராகி வருகிறது. இருநகரங்களில் உள்ள உணவகங்கள், மதுக்கடைகளில் வெளிப்புற இருக்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்” என அறிவித்தார்.
கோவிட் - 19 அச்சுறுத்தல் : மீண்டும் திறக்கப்படவுள்ள ஸ்பெயின் கடற்கரைகள்! மாட்ரிட் மற்றும் பார்சிலோனா ஆகிய இரண்டு நகரங்களும் ஸ்பெயினில் தொற்று நோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க :கோவிட்-19 தடுப்பு மருந்து - பரிசோதனை நடத்த ஆக்ஸ்போர்டு திட்டம்