தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 27, 2020, 12:07 PM IST

ETV Bharat / international

இந்தியாவைப் போல் இங்கிலாந்திலும் 'கரோனா கைத்தட்டு'

லன்டன்: கரோனா பாதிப்பைத் தடுக்கும் முயற்சியில் தீவிரமாகப் பணியாற்றிவரும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு இந்தியாவைப் போலவே இங்கிலாந்திலும் கைத்தட்டி நன்றி தெரிவிக்கப்பட்டது.

UK
UK

கரோனா வைரஸ் பாதிப்பு உலகையே உலுக்கிவரும் நிலையில் இங்கிலாந்தில் இதுவரை 11 ஆயிரத்து 658 பேர் பாதிக்கப்பட்டு, 578 பேர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைக்காக இரவு பகலாக வேலைசெய்துவரும் சுகாதாரத் துறைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக அவர்களைக் கைத்தட்டி உற்சாகப்படுத்தும் முன்னெடுப்பு நேற்று நடைபெற்றது.

கடந்த 22ஆம் தேதி இந்தியாவில் நடைபெற்ற மக்கள் ஊரடங்கின்போது மாலை 5 மணியளவில் நாட்டு மக்கள் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு கைத்தட்டியும், பொருள்கள் மூலம் சத்தம் எழுப்பியும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்ற நடவடிக்கையை நேற்று மாலை இங்கிலாந்திலும் மேற்கொள்ள அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரிக்கைவைத்தார். அதன்படி, நேற்று மாலை லண்டன் நகரின் முக்கியப் பகுதிகளில் நீல வண்ண மின்விளக்குகள் ஏற்றப்பட்டு, தேசிய சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

கைத்தட்டி உற்சாகப்படுத்திய மக்கள்

அத்துடன் மக்கள் தங்களில் இருப்பிடத்தில் இருந்துகொண்டு சில நிமிடங்கள் கரெவொலி எழுப்பி சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தனர். பிரதமர் போரிஸ் ஜான்சனும் தனது பக்கத்து வீட்டுக்காரருடன் சேர்ந்து கைத்தட்டி நன்றியை வெளிப்படுத்தினார்.

இதையும் பாருங்க:இனிமை நிறைந்த உலகம் இருக்கு கொரோனா பற்றிய கவலை எதற்கு...

ABOUT THE AUTHOR

...view details