தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

புடினுக்கு கைகொடுத்த மருத்துவருக்கு கரோனா: அதிர்ச்சியில் ரஷ்யா! - Moscow doctor tests positive, shook Putin's hand

மாஸ்கோ: ரஷ்யா அதிபர் புடினுடன் கைகுலுக்கிய மருத்துவருக்கு தற்போது கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Putin
Putin

By

Published : Apr 1, 2020, 10:42 AM IST

கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து மோசமடைந்துவருகிறது. உலகெங்கும் இதுவரை எட்டு லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல உயிரிழப்புகளும் 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ரஷ்யாவில் தற்போதுதான் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகிறது. வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்படவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து ரஷ்யா அதிபர் புடின் கடந்த வாரம் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கொம்முனர்கா மருத்துவமனையில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

அப்போது மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டெனிஸ் புரோட்சென்கோவைச் சந்தித்து அவருடன் புடின் கைகுலுக்கினார். தற்போது மருத்துவர் டெனிஸூக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து டெனிஸ் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இவரைப் புதின் சந்தித்து ஒரு வாரம்கூட ஆகாததால் ரஷ்யா அரசியிலில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெனிஸுக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், புடினுக்கும் விரைவில் வைரஸ் தொற்று குறித்த சோதனை நடைபெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல் இத்தாலியில் தொடரும் கோர தாண்டவம்

ABOUT THE AUTHOR

...view details