தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'கடந்த 7 வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரிப்பு!'

உலகளவில் கரோனா பாதிப்பு குறைந்துவந்த நிலையில், கடந்த ஏழு வாரங்களாக மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என  உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

WHO chief
டெட்ரோஸ் அதானோம்

By

Published : Apr 13, 2021, 6:59 AM IST

உலகளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13.70 கோடியைத் தாண்டியுள்ளது. இதுவரை 29 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ஃபிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

இது குறித்துப் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், "கடந்த ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் தொடர்ச்சியாக ஆறு வாரங்களுக்கு கரோனா பாதிப்பு குறைந்திருந்ததைக் காண முடிந்தது.

ஆனால், இப்போது தொடர்ச்சியாக ஏழு வாரங்கள் அதிகரித்துவரும் பாதிப்புகளையும், நான்கு வாரங்கள் அதிகரித்துவரும் இறப்புகளையும் பார்க்க முடிகிறது. ஆசியாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

தடுப்பூசி மட்டுமே கரோனாவை விரட்டாது

உலகளவில் 780 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தாலும், முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியைப் பின்பற்றுதல், பரிசோதனை செய்தல், தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல் போன்ற பொதுச் சுகாதார நடவடிக்கைகளை அரசு பின்பற்ற வேண்டும்.

மக்களும் அலட்சியமாக இருக்கக் கூடாது. கரோனா போரில் தடுப்பூசிக்கு முக்கியப் பங்கு உள்ளது. ஆனால், தடுப்பூசி மட்டுமே தடுப்பதற்கான வழி கிடையாது. கரோனா விதிமுறைகளையும் பின்பற்றினால் மட்டுமே பரவலைத் தடுத்திட முடியும். தற்போது, மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவழிகின்றன. மக்கள் அதிகளவில் இறந்துவருகின்றனர்.

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுங்கள்

இதைத் தடுத்திட வேண்டும், கரோனா பெருந்தொற்று நீண்டு நாள்களாக இருந்துவந்தாலும், எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மக்கள் ஒருங்கிணைந்த முயற்சியுடன், தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு பொதுச் சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுங்கள்.

இந்தத் தொற்று நோயை சில மாதங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:’தடுப்பூசி விநியோகத்தில் அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வு’ - டெட்ரோஸ் அதானோம் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details