தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கோவிட்-19 நெருக்கடி : உலகளவில் 28.4 மில்லியன் அறுவை சிகிச்சைகள் ரத்து!

லண்டன் : கோவிட்-19 நெருக்கடி காரணமாக உலகளவில் 28.4 மில்லியன் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்படுவதற்கோ அல்லது ஒத்திவைக்கப்படுவதற்கோ வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வு முடிவொன்று வெளியாகியுள்ளது.

By

Published : May 18, 2020, 10:24 AM IST

COVID-19 disruption will lead to 28 million surgeries cancelled worldwide: Study
கோவிட்-19 நெருக்கடி : உலகளவில் 28.4 மில்லியன் அறுவை சிகிச்சைகள் ரத்து!

பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் சர்ஜரியில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மருத்துவமனை சேவைகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு வாரமும் 2.4 மில்லியன் அறுவை சிகிச்சைகள் ரத்துசெய்யப்படுவதாக அறிய முடிகிறது.

கோவிட்-19 தொடர்பான மருத்துவ கட்டுப்பாடுகளால் உலகளவில், திட்டமிடப்பட்ட 72.3% அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதுவரை ரத்து செய்யப்பட்ட பெரும்பாலான அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் தொடர்பின்றி இருக்கின்றன.

இந்த 12 வார காலப்பகுதியில் எலும்பியல் தொடர்பிலான 6.3 மில்லியன் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, 2.3 மில்லியன் புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்படும் அல்லது ஒத்திவைக்கப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் என்.ஐ.எச்.ஆர் உலகளாவிய சுகாதார ஆராய்ச்சி பிரிவின் ஆலோசகரும், மூத்த விரிவுரையாளருமான அனீல் பாங்கு கருத்துத் தெரிவிக்கையில்: “கோவிட்-19 பெருந்தொற்றுநோய் வேகமாக பரவிவரும் இந்த காலக்கட்டத்தில், சிறப்பு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்க, உறுதிசெய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், மருத்துவமனைகளை பரந்தப்பட்ட அளவில் பயன்படுத்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறைகளை தீவிர சிகிச்சை பிரிவுகளாக மாற்றியிருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதனால், தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள் தள்ளிப்போவது தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது”என தெரிவித்தார்.

இதையும் படிங்க :கரோனாவிற்கு முற்றுப்புள்ளி வைத்த முதல் நாடு!

ABOUT THE AUTHOR

...view details