கரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் தற்போது 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி உலகம் முழுவதும் 196 நாடுகள் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் அதிகப்படியாக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து 95 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடுகளில் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, மேற்குப் பசிபிக் பகுதிகளில் 96 ஆயிரத்து 580 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.