உலக நாடுகளில் கரோனா வைரஸ் காரணமாக பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால், பல்வேறு நாடுகள் அரசின் முழுக் கட்டுபாட்டுக்குள் தற்போது வந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஸ்பெயின் நாட்டில் முர்சியா மாகாணத்தில் அரசின் தடையை மீறிய ஒருவரின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், மக்கள் வெளியே நடமாட அரசு தடை விதித்துள்ளதால், டைனோசர் வேடம் அணிந்துகொண்டு சாலையில் அந்நபர் உலா வந்துள்ளார். இதைப் பார்த்த முர்சியா காவல் துறையினர், உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தி மீண்டும் வீட்டிற்கே அனுப்பி வைத்தனர்.