தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் பயணித்த நபர் - நிறுத்தப்பட்ட இத்தாலி கப்பல் - Corano Virus Test Negative for Passenger aboard Italian Cruise ship

இத்தாலி நாட்டிற்கு வந்த கப்பலில் பயணித்த பெண் ஒருவர் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் காணப்பட்ட நிலையில், சக பயணிகள் பாதுகாப்புக் கருதி ரோம் நகரில் கப்பல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அப்பயணி பரிசோதிக்கப்பட்டார்.

கொரோனா வைரஸ்
காஸ்டா செமெரால்டா எனப்படும் இத்தாலி கப்பல்

By

Published : Jan 31, 2020, 1:49 PM IST

Updated : Mar 17, 2020, 5:23 PM IST

உலக சுகாதார அமைப்பு கொரரோனா வைரஸை உலகளாவிய சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ள நிலையில், சீனாவில் மட்டும் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 170ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இத்தாலி வழியே சென்ற பயணிகள் கப்பல் ஒன்றில் பயணித்த சீனப் பயணி ஒருவரிடம், கொரொனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால் கப்பலில் பயணம் செய்த 6000 பயணிகள் பாதுகாப்புக் கருதி கப்பலிலிருந்து இறக்கி விடப்பட்டுள்ளனர். காஸ்டா செமெரால்டா எனப்படும் இந்தக் கப்பல் இத்தாலி தலைநகர் ரோமில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், கொரொனா வைரஸ் அறிகுறிகள் கொண்ட இந்தப் பயணி ஹாங்காங்கிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி, பயணித்தின் போது உடல் நலம் குன்றத் தொடங்கியுள்ளார்.

காய்ச்சல் தீவிரமடைந்து, கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் பயணித்த 54 வயதான அப்பெண்மணியும் அவரது கணவரும் பயணத்தைத் தொடங்கியது முதலே கப்பலில் தனியே தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு கொரொனா வைரஸ் பாதிப்பு இல்லை எனக் கண்டறியப்பட்டது. அதன் பிறகு கப்பல் மீண்டும் ரோமிலிருந்து தன் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

முன்னதாக, சீன சுற்றுலாப் பயணிகள் இருவர் கரோனா வைரஸ் பாதிப்புகளுடன் விமானம் மூலம் இத்தாலி வந்த நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான விமானப் போக்குவரத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அந்நாட்டு பிரதமர் ஜுஸெப்பி கோண்டெ உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா வைரஸ்: சீனாவுடனான எல்லையை மூடும் ரஷியா

Last Updated : Mar 17, 2020, 5:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details