இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் காங்கோவின் தாது வளமிக்க இடாரு பகுதியைக் கைப்பற்ற பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் ஒன்றுக்கொன்று போரிட்டு வந்தன. அதில், யூனியன் ஆஃப் காங்கோலீஸ் பேட்ரியார்ஸ் (Union of Congolese Patriots- UCP) குறிப்பிடத்தக்கது.
இந்த கிளர்ச்சி அமைப்பின் ராணுவ பிரிவான 'பேட்டிரியாட்டிக் போர்ஸ் ஃபார் தி லிபரேஷன் ஆஃப் காங்கோ'-வை (Patriotic Forces for the Liberation of Congo FCLP) தலைமையேற்று நடத்தியவர் தான் இந்த பாஸ்கோ நடகன்டா.
2002-2003 இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த FCLP ஆயிரக்கணக்கானோரைப் படுகொலை செய்தும், பெண்கள், குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்தும் குரூர போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர்.