இந்த ஆண்டின் பருவநிலை குறித்து உலக வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பருவநிலை கால மாற்றத்தால் உலக பொருளாதாரம் பாதிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
உலக பொருளாதாரத்தை பாதிக்கும் பருவநிலை மாற்றம் -உலக வானிலை ஆய்வு மையம்
ஜெனிவா: உலக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பருவ நிலை மாற்றமானது உலக பொருளாதாரத்தை பாதிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
உலக வானிலை ஆய்வு மையம்
மேலும் 2018-2019ஆம் ஆண்டுகளில் 60 கோடி மக்கள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 35 கோடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை தாக்கிய ஃபுளோரன்ஸ் புயலும் மைக்கேல் புயலும் 1,400 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்சேதத்தை விளைவித்துள்ளதாகவும் கடந்த நூற்றாண்டுகளில் இந்தியா கண்டிராத வெள்ளத்தை கேரளா கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.