சீன அரசின் அடக்குமுறையை எதிர்த்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அந்நாட்டியின் உய்கர் இஸ்லாமிய மக்கள் நாடியுள்ளனர். வெளிநாட்டில் வாழும் உய்கர் இன மக்கள், சீன அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகின்றன.
ஒட்டுமொத்த சமூகத்திற்கு எதிராக இத்தகையை மாபெரும் குற்ற நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டு வருவது தொடர்பாக விரிவான விசாரணையை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜிங்பிங், முன்னாள் அதிபர் ஹூ ஜிந்தாவோ, சீன பாதுகாப்புப் படைத் தளபதிகள் ஆகியோரின் மீது இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
முன்னதாக, 2018ஆம் ஆண்டிலேயே உயர்கர் பிரிவு மக்கள் மீதான வன்முறைக்கு எதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இதுபோன்ற உள்நாட்டு விவகாரங்களில் தலையிட அனுமதியில்லை எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கிர்கிஸ்தானில் 700 இந்திய மருத்துவ மாணவர்கள் தவிப்பு!