தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ரஷ்ய அதிபர் புடினுடன் பேசிய சீன அதிபர்! - ரஷ்யா-உக்ரைன் போர்

ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புடினுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியுள்ளார்.

china president speaks with Russia president  Russia president  viladimir putin  Xi Jinping  Xi Jinping speaks with Vladimir Putin  ரஷிய அதிபருடன் சீன அதிபர் பேச்சு வார்த்தை  ரஷிய அதிபர் புதின்  ரஷ்யா-உக்ரைன் போர்  புதினுடன் பேசிய ஜின்பிங்
ரஷிய அதிபருடன் பேசிய சீன அதிபர்

By

Published : Feb 25, 2022, 8:42 PM IST

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது. இன்று ரஷ்ய மிகவும் உக்கிரமாக மும்முனைத் தாக்குதலைத் தொடுத்துள்ளது. உக்ரைனும் தங்களைப் பாதுகாத்துகொள்ள, ரஷ்ய படைகளைத் தாக்கிவருகின்றது.

வான்வழி, தரைவழி எனத் தாக்குதலை நடத்திவருவதால் உக்ரைனில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

அதில், உக்ரைனின் நிகழ்த்தப்படும் தாக்குதல் நிலவரம் குறித்து, ஜி ஜின்பிங்கிடம் புடின் எடுத்துரைத்தார். அப்போது, உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணும்படி, ஜி ஜின்பிங் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ரஷ்யாவைச் சேர்ந்த 1,000 வீரர்களை, உக்ரைன் சுட்டுக் கொன்றுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: உக்ரைனில் உள்ள மாணவர்களை அழைத்துவர இந்திய தூதரகம் நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details