தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

செல்லப்பிராணிகள் கரோனா வைரஸை மனிதர்களுக்குப் பரப்புமா? - விலங்குகளுக்கு கரோனா வைரஸ்

மனிதர்களை மட்டுமே தாக்கி வந்த கரோனா வைரஸ், தற்போது விலங்குகளையும் தாக்கி வருவது, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

்ே்ே
்ே்ே

By

Published : Apr 24, 2020, 8:50 PM IST

உலகையே மிரட்டிய கரோனா வைரஸை எதிர்கொள்ள முடியாமல், பல உலக நாடுகள் திணறி வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

இந்த வைரஸ் மனிதர்களை மட்டுமே முதலில் தாக்கி வந்த நிலையில், தற்போது விலங்குகள் பக்கம் திரும்பியுள்ளது. அந்த வகையில், நியூ யார்க்கின் புரான்ஸ் வனப்பூங்காவில் 4 வயதான புலிக்கு முதலில் கரோனா தொற்று உறுதியானது.

பூங்கா காப்பாளருக்கு கரோனா தொற்று இருக்குமா என அலுவலர்கள் சந்தேகித்து வந்த நிலையில், பூங்காவில் சிங்கம், புலி என கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இதேபோல், நியூ யார்க்கில் வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு செல்லப் பூனைகளுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தப் பூனைகளுக்கு உரிமையாளர்கள் மூலம் கரோனா பரவியிருக்கலாம் எனச் சந்தேகித்தனர்.

இதுகுறித்து அமெரிக்காவின் வேளாண்மைத்துறையினர் கூறுகையில், "விலங்குகளுக்குப் பரவும் கரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். உரிமையாளர்கள் அச்சமடைந்து செல்லப்பிராணியை பரிசோதனை செய்ய வேண்டாம். உங்கள் செல்லப்பிராணிகளுடன் விளையாடுவதற்கு முன்பு, கைகளைச் சுத்தமாக கழுவ வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:புயல் வேகத்தில் கரோனா: அதிர்ச்சியில் அரசு

ABOUT THE AUTHOR

...view details