சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்துக்கும் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பல நாடுகள் அரசின் முழுமையான கண்காணிப்புக்குள் தள்ளப்பட்டுள்ளன. சீனாவில் தற்போது குறையத் தொடங்கியுள்ள வைரஸ் தாக்கமானது, இத்தாலியில் தனது கோர தாண்டவத்தை காட்டி வருகிறது. தினந்தோறும் இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தாலி நாடு, அரசின் முழுக் கட்டுபாட்டுக்குள் வரப்பட்டு, மக்கள் யாரும் வீட்டை வீட்டு வெளியே போகக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தாலியில் நேபிள்ஸ் பகுதியில் வசித்து வருபவர் லூகா ஃபிரான்சிஸ். இவரின் சகோதரி தெரசா ஃபிரான்சிஸுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்த சில மணி நேரத்திலே உடல் நிலைமை மோசமாகி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு தகவல் அளித்துள்ளனர். தங்கைக்கு கொரோனா வைரஸ் தாக்கியது உறுதி செய்யப்படாத நிலையிலும், உள்ளூர் மருத்துவமனை சடலத்தை எடுக்க வர மறுப்பு தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு வாரமாக தங்கையின் சடலுத்துடன் குடும்பத்தினர் அனைவரும் தங்கியிருந்துள்ளனர்.
இதனால் மிகுந்த மன ஊளைச்சலுக்கான லூகா, தனது ஃபேஸ்புக்கில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனது தங்கை இறந்துவிட்டார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என்னால் தங்கைக்கு இறுதிச் சடங்கும் செய்ய முடியவில்லை” என்றார்.