பிரெக்ஸிட்டிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அந்நாட்டு பிரதமர் பாரிஸ் ஜான்சன், ஐரோப்பா ஆணையத்தின் தலைவர் ஜீன் கிலாட் ஜங்கரை (Jean claude Junker) இன்று நேரில் சந்திப்பதற்காக லக்ஸிம்பர்க் செல்கிறார்.
ஐரோப்பிய ஆணைய தலைவரை சந்திக்கிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்! - பிரிக்ஸிட்
லண்டன்: பிரிட்டன் பிரதமர் பாரிஸ் ஜான்சன் இன்று ஐரோப்பா ஆணையத்தின் தலைவர் ஜீன் கிலாட் ஜங்கரை சந்திக்கவுள்ளார்.
பாரிஸ் ஜான்சன்
இந்தச் சந்திப்பு மதியம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து லக்ஸிம்பர்க் பிரதமர் சேவியர் பெட்டலையும் (Xavier Bettel) மரியாதை நிமித்தமாக போரிஸ் ஜான்சன் சந்திக்கவுள்ளார்.
மேலும் பிரட்டனின் பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்ற பிறகு ஐரோப்பா ஆணையத்தின் தலைவர் ஜீன் கிலாட் ஜங்கரை சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
Last Updated : Sep 15, 2019, 7:24 AM IST