உலகம் முழுவதும் 5,36,454 பேர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு காண்பிக்காத இந்நோய் பிரிட்டன் இளவரசர் சார்லஸை தாக்கியது. இதனைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிரட்டன் பிரதமருக்கு கரோனா
17:03 March 27
பிரட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவ பரிசோதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த 24 மணி நேரத்தில் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து, தனிமைப்படுத்திக் கொண்டேன்.
ஆனால், வீடியோ கான்பரன்சிங் மூலம் கரோனாவுக்கு எதிரான அரசின் நடவடிக்கையை கண்காணிப்பேன்" என பதிவிட்டுள்ளார். கரோனா வைரஸ் நோயால் உலகம் முழுவதும் 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கரோனா