தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இருபக்கமும் சமரசம் செய்தால் ’பிரிக்ஸிட்’ சாத்தியமே - தெரஸா மே - Labour party

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கான ’பிரிக்ஸிட்’ மசோதாவை நிறைவேற்ற பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இருக்கும் இரு கட்சிகளும் (தொழிலாளர் கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சி) சமரசம் செய்துகொண்டால் மட்டுமே சாத்தியம் என்று அந்நாட்டின் பிரதமர் தெரஸா மே கூறியுள்ளார்.

தெரஸா மே

By

Published : Apr 8, 2019, 12:07 PM IST

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேற ஐரோப்பிய ஒன்றிய தலைமையுடன் ’பிரிக்ஸிட்’ ஒப்பந்தத்தை பிரிட்டன் செய்தது. இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மூன்று முறை அந்நாட்டின் பிரதமர் தெரஸா மே முயன்றார்.

ஆனால் மூன்று முறையும் இந்த மசோதா நிராகரிக்கப்பட்டது. அதேசமயம் ஒப்பந்தமின்றி பிரிட்டன் வெளியேறுவதையும் நாடாளுமன்றம் விரும்பவில்லை. இதனால் ஒப்பந்தத்துடன் வெளியேறுவது அல்லது ’பிரிக்ஸிட்டை’ கைவிடுவது என்ற நிலை உருவானது.

இந்நிலையில் எதிர்கட்சித் தலைவரான ஜெரிமி கோர்பைனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் பின்னடைவை சந்தித்த சூழலில், பிரிட்டன் பிரதமர் தெரஸா மே, தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,”ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கான ’பிரிக்ஸிட்’ மசோதாவை நிறைவேற்ற பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இருக்கும் இரு கட்சிகளும் (தொழிலாளர் கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சி) சமரசம் செய்துகொண்டால் மட்டுமே சாத்தியம் என்று கூறியுள்ளார்.

தெரஸா மே

ABOUT THE AUTHOR

...view details