பிரெக்ஸிட் பரபரப்பிலிருக்கும் பிரிட்டனில் கடந்த 12ஆம் தேதி ( வியாழக்கிழமை) பொதுத்தேர்தல் நடந்தது. பிரெக்ஸிட்ட மையமாக வைத்து தேர்தலை எதிர்கொண்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.
இதையடுத்து, பாரம்பரிய தொழிலாளர் கட்சி ( எதிர்க்கட்சி) வாக்காளர்களின் கோட்டையான மேற்கு இங்கிலாந்து பகுதிக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "நாடு முன்னேறிச் செல்வதற்கான நேரம் வந்து விட்டது. நாம் அனைவரும் ஒன்றுகூடி பிரெக்ஸிட் விவகாரத்துக்கு தீர்வு காண வேண்டிய நேரமிது. அதை நான் கண்டிப்பாக செய்து முடிப்பேன். இனி பிரெக்ஸிட்டை தடுக்க யாராலும் முடியாது" என்றார்.