1975ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைந்து பிரிட்டன், 47 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.
இதனைக் கொண்டாடும்விதமாக ஆயிரக்கணக்கான பிரெக்ஸிட் (பிரிட்டன் வெளியேற்றம்) ஆதரவாளர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் முன்பாக ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை எரித்து ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.
'பிரெக்ஸிட் ஒரு முடிவல்ல; தொடக்கமே' என்று கூறி காணொலியை ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அந்நாட்டு அரசியல் புதிய விதியில் பிறந்துவிட்டதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின்படி, 2020ஆம் ஆண்டுவரை ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான விதிகள் பிரிட்டனிலும் செயல்பாட்டில் இருக்கும். இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த ஒன்றியத்துடனான எதிர்கால உறவு குறித்து பிரிட்டன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.
இதையும் படிங்க : பிரெக்ஸிட்டால் பிரிட்டனுக்கு ஆபத்தா?