ஸா பாலோ: பிரேசில் நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் கொத்து கொத்தாக மக்கள் செத்து மடியும் நிலையில், ஆயிரக்கணக்கான கல்லறைகளை தோண்டும் நிலைக்கு அந்நாடு தள்ளப்பட்டுள்ளது.
brazil mass graves brazil coronavirus graves brazil deaths graves Brazils mass graves sao paulo graves brazil graves கரோனா வைரஸால் கல்லறைகளின் தேசமான பிரேசில் பிரேசில், கரோனா பாதிப்பு, கோவிட்-19 பாதிப்பு Coronavirus Cases
By
Published : May 2, 2020, 12:59 PM IST
|
Updated : May 2, 2020, 1:32 PM IST
கரோனா வைரஸ் பரவலை சமாளிக்க உலக நாடுகள் பெரிதும் போராடிவரும் நிலையில், பிரேசில் நகரமான சாவ் பாலோவில் ஆயிரக்கணக்கான கல்லறைகள் தோண்டப்பட்டுள்ளன. உலகெங்கிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கோவிட்-19 பெருந்தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், நாட்டில் மேலும் இறப்புகளுக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளதால், நகரின் விலா ஃபார்மோசா கல்லறையில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லறைகள் தோண்டப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரேசிலில், ஏற்கனவே முழுப் பாதுகாப்பு உடைகளுடன் சவப்பெட்டிகளை சுமந்து செல்லும் கல்லறை ஊழியர்கள், வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் சிறிய இறுதிச் சடங்குகளுடன் வெகுஜன கல்லறையில் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்வார்கள்.
கரோனா வைரஸால் கல்லறைகளின் தேசமான பிரேசில்!
முன்னதாக, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ வைரஸின் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிட்டார். அதனை அவர் சாதாரண சிறிய காய்ச்சலுடன் ஒப்பிட்டார். லத்தீன்-அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலில், தற்போது சீனாவை விட அதிகமான கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பாளர்கள் உள்ளனர். இங்குப் பெரும்பாலானவர்களுக்கு, கரோனா வைரஸ் காய்ச்சல், இருமல் போன்ற லேசான அல்லது மிதமான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இது இரண்டு முதல் மூன்று வாரங்களில் குணமாகிவிடும். ஆனால் வயதானவர்களுக்கு நிமோனியா போன்ற கடுமையான காய்ச்சலை ஏற்படுத்தி, மரணத்திற்கு வழிவகுக்கிறது.