ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காக கொண்டுவரப்பட்ட பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் மூன்று முறை நிராகரித்தது. இதன்காரணமாக, தன் தோல்வியை ஒப்புக்கொண்ட பிரிட்டன் பிரதமர் தெரசா மே தன் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த மே மாதம் அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் போட்டாபோட்டி நிலவியது.
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவிய இந்தப் போட்டியில், 45 ஆயிரத்து 656 வாக்குகள் வித்தியாசத்தில் வெளியுறவுத்துறை செயலர் ஜெர்மி ஹண்ட்டை வீழ்த்தி போரிஸ் ஜான்சன் வெற்றிபெற்றுள்ளார்.
ட்விட்ரில் போரிஸ் ஜான்சன் நன்றி முன்னதாக, இவர் பிரிட்டனின் வெளியுறவுத்துறை செயலராகவும், லண்டனின் மேயராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரெக்ஸிட் விவகாரத்தில் போரிஸ் முக்கிய முடிவுகள் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவருக்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.